×

வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

கேரளா: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க கூடாது என வயநாடு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராம மக்களுக்கு மாவேயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வயநாடு மாவட்டத்தின் அடர் வனப்பகுதியாக தலப்புழாவை ஒட்டிய தோட்ட தொழிலாளர் கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய மாவேயிஸ்ட்டுகள் 4 பேர் இன்று காலை 6.30 மணிக்கு நுழைந்தனர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை எச்சரித்தனர்.

ஆண்டு ஆண்டுகளாக ஜனநாயகம் மக்களது வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர தவறி விட்டதாகவும், ஆயுதம் ஏந்திய எழுச்சியால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக கிராம மக்கள் கூறினர். கிராம இளைஞர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ள காணொளியில் 4 மாவேயிஸ்ட்டுகள் இருப்பதும், அதில் இருவர் துப்பாக்கிகளை வைத்திருப்பதும் பதிவாகி இருக்கிறது.

அவர்கள் மாவேயிஸ்ட்டுகள் இயக்க தலைவர் சிபிமொய்தீன், சந்தோஷ், சோமன், மனோஜ் எனப்படும் ஆசிக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் சுமார் 20 நிமிடம் பேசிய பிறகு மாவேயிஸ்ட்டுகள் மக்கி மலைப்பகுதியை நோக்கி சென்று விட்டனர். மாவேயிஸ்ட்டுகளின் மிரட்டல் குறித்து தகவலறிந்த கேரள காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் மாக்கி மலை சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

The post வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Maoists ,Wayanadu ,Kerala ,Talappuzha ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை